பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்குப்பதிவு

ராஜராஜசோழனை அயோக்கியன் என்று அவதூறாக பேசிய புகாரில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜசோழனை அயோக்கியன் என்று அவதூறாக பேசியுள்ளார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பா.ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகாரில் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி ஆகியவற்றின் பேரில் சமுதாயத்தில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!