பிக்காஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் மஹத்

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய இரண்டாவது பிரோமோ உள்ளது.

மற்றவர்கள் சொல்வதை கேட்டு தேவையில்லாத செயல்களை செய்த மகத்தை நேற்று கமல் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இன்று எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. இந்த வாரம் மகத், மும்தாஜ், பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இன்று மகத் தான் வெளியேறுவார் என்ற தகவல் உளவி வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாவது பிரோமோ வெளியாகி உள்ளது. இதில், மகத்துடன் அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் அழுதுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை சென்றாயன் சமாதனப்படுத்துகிறார்.

Sharing is caring!