பிக்பாஸில் இனி இல்லை ஷாரிக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஷாரிக் வெளியேற்றப்படுகிறார்.

ஒரு வாரம் தொடர்ந்த ஐஸ்வர்யாவின் சர்வாதிகார புயலுக்கு பின்பு பிக்பாஸ் வீடு மீண்டும் அதைியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று கமல் கடந்த நாட்களில் நடந்த பிரச்னைகள் குறித்து பேசினார்.

நேற்றைய நிகழ்ச்சிகள் முழுக்க பஞ்சாயத்துக்கள் தான் நடந்தன. இந்நிலையில் இன்று எவிக்‌ஷன் படலம் நடக்கும். இந்த வாரம் மும்தாஜ், ஷாரிக், மகத், பாலாஜி, பொன்னம்பலம் மற்றும் ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் ரித்விகா சேஃப் என்று நேற்றே கமல் அறிவித்து விட்டார்.

இந்நிலையில் இன்று மீதம் உள்ளவர்களில் யார் வெளியேற உள்ளார் என்பது அறிவிக்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிக் வெளியேறுகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழும் விதத்தில் இருந்தவர் ஷாரிக். அவ்வபோது ஐஸ்வர்யா தத்தாவால் அவரை பற்றி மக்கள் பேசினர். கடந்த வாரம் பாலாஜி  பேசும் போது, ஷாரிக் பையன் பாவம் என்று கூறியதை ஐஸ்வர்யா பல முறை சொல்லிக்காட்டினார். அதை தவிர்த்து மும்தாஜை வம்பிழுக்கும் வேலைகளை செய்து வந்த ஷாரிக் இன்று வெளியேற்றப்படுகிறார்.

Sharing is caring!