பிக்பாஸில் தன்னை திட்டியதற்காக… கமலை பழிவாங்கிய பிக்பாஸ் காயத்ரி..!

எனக்கு அறிவுரை கூறிய நீங்கள், இந்துக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று கமல்ஹாசனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஜூலி உள்ளிட்ட மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கமல் போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இவர், காயத்ரி ரகுராம் ஓவியாவுக்கு இடையே அடிக்கடி முட்டி கொள்ளும். அதனால் காயத்ரியை கமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கிப் பேசினார். பதிலுக்கு என் அப்பாவை தவிர எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண கூடாது? என்று புறம்பேச அதற்கும் கமல் பதிலடி கொடுக்க, திக்குமுக்காடி நின்றார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று கூறினார். கமலின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. கமல் இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி, ‘மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறீர்கள். எனவே இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள்.

மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மற்றொரு பதிவில், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. இங்குள்ள மத வெறுப்பாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் அதை நடத்தியிருப்பார். இந்த சத்தமே இருக்காது. நீங்களும் அதையே செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் பதிவை கண்ட பலரும் காயத்ரி சரியான நேரத்தில் கமலை வச்சு செய்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Sharing is caring!