பிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது!!

இந்தியில் பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டபுள் பெட் பயன்படுத்தகூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களிடையே பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

13 சீசன் முடிவடைந்த நிலையில் 14வது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பிக் பாஸ் சூட்டிங் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 14ல் டபுள் பெட் கொண்ட கட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதாவது, போட்டியாளர்கள் எல்லாரும் தனி கட்டில்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பெட்டில் இரண்டு பேர் தூங்கக்கூடாது என்றும் தட்டு, கண்ணாடி உள்ளிட்ட எந்த பொருட்களையும் பகிர்ந்துக் கொள்ள கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் வாரத்துக்கு ஒரு முறை போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Sharing is caring!