பிக்பாஸ் இல்லத்தில் மும்தாஜ் குடும்பத்தினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மகத் வெளியான பிறகு, வீட்டில் நடந்து வந்த சண்டைகள் தற்போது குறைந்துள்ளன. நேற்றைய நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் மற்றவர்கள் மேல் வைத்திருக்கும் கருத்துக்கள் குறித்து மனம் விட்டு பேசியதால், பகையும் குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்று வெளியாகி இருக்கும் முதல் பிரோமோவில் மும்தாஜின் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்கள் வந்ததும், மும்தாஜ் அழுகிறார். மேலும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை மும்தாஜின் தாய் அணைத்துக்கொள்கிறார். பின்னர் மும்தாஜை நினைத்து தான் பெருமை கொள்வதாக கூறுகிறார்.

முதல் சீசனில் இதே போல ‘ஃபிரீஸ்’ என்று சொன்னதும் உரைந்து நிற்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்தனர். இன்றைய நிகழ்ச்சியில் அந்த டாஸ்க் தான் நடைபெற உள்ளது. பிக்பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

Sharing is caring!