பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக பிரபல திருநங்கையா?…

பிரபல தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ காணொளி இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது.

மேலும், மூன்றாவது சீஸனில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது. இதுவரை எம் எஸ் பாஸ்கர், ஆல்யா மானசா, ஸ்ரீரெட்டி என கூறிவரும் நிலையில் தற்போது பிரபல திருநங்கையான சாக்ஷி ஹரேந்திரன் பெயரும் போட்டியாளர்கள் பெயரில் அடிபட்டு வருகிறது.

இவர் பிரபல சேனலில் சிங்கிங் ஸ்டார் நிகழ்ச்சியில் ஆண், பெண் இரு குரலிலும் பாடி அசத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. தற்போது இவர் பிக்பாஸில் கலந்துகொள்ளப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sharing is caring!