பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ..!!!

பிக் பாஸ் சீசன் 3யின் அதிகாரப்பூர்வ புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பானது.

வெளியுலகத் தொடர்பு இல்லாமல், பிரபலங்கள் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் 100 நாட்கள் வசித்தது மக்களுக்கு புதுமையாக இருந்ததால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் பிரபலங்களாக அண்ணாந்து பார்த்த பலரது உண்மையான முகம்

இந்நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தது.

புறணி பேசிக் கொண்டு, டாஸ்க் வந்தால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, டாஸ்க் முடிந்ததும் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டு என ஒரே குடும்பமாக போட்டியாளர்கள் வாழ்ந்ததை, மக்களும் குடும்பம் குடும்பமாக அமர்ந்து பார்த்தனர். முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.

முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பானது. முதல் சீசன் போல் போட்டியாளர்கள் இயல்பாக இல்லை, கவனமாக விளையாடுகின்றனர், நடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தபோதும், அந்த நிகழ்ச்சிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது.

இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது.

குறித்த வீடியோவிற்கு முகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று இரவு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் இடைவேளையில் நேரத்தில் அடுத்த ப்ரோமோ வீடியோவை வெளியிடப்போவதாக விஜய் தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Sharing is caring!