பிக்பாஸ் மலையாளத்தில் கமல்

விஸ்வரூபம் படத்தை மறந்தாலும் அது வெளியாவதற்கு சந்தித்தப் போராட்டங்களை யாராலும் மறக்க முடியாது. 2013-ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய இந்தப் படம் ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் தயாரிக்கப் பட்டிருந்தது. விமர்சன ரீதியாக, ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பும் இதற்குக் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியான 2-ம் பாகம் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்ட படங்கள் வெளியாகியுள்ளன. அதோடு அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் ‘ஏசியாநெட்’ சேனலே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறது.

Sharing is caring!