பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் வரும் பிரபல நடிகை

சென்னை:
பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார் பிரபல நடிகை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் யார் தெரியுங்களா?

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது போட்டியாளர்கள் நடுவில் ஒருசில மோதல்கள் நடந்துவருகிறது. மேலும் இந்த வாரம் முதல் எலிமினேஷனும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு புதிதாக ஒரு நடிகை வரவுள்ளார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தான் அது.
அவர் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் வெளியீட்டிற்காக வருகிறார். அந்த பாடலுக்கு அவர் பிக்பாஸ் ஸ்டேஜில் நடனமாடவுள்ளார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் 2 செம களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!