பிக்பாஸ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பொன்னம்பலம்

சென்னை:
சிறையில் உள்ளார்… சிறையில் உள்ளார்… அட பிக்பாஸ் வீட்டு சிறையில்தாங்க பொன்னம்பலத்தை அடைக்க பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் வார முடிவில் அனந்த் வைத்யநாதன் வெளியேறினார். அதே வேளையில் சர்ச்சையில் இருந்த பொன்னம்பலம் காப்பாற்றப்பட்டார். இவர் மீது அனந்த் குறை கூறினார். அதே வேளையில் பொன்னம்பலம் தவறான வார்த்தை பயன்படுத்தியதாக அவரை பிக்பாஸ் ஜெயிலில் அடைக்கவேண்டும் என கூறினார்.

மேலும் யாஷிகா, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா செய்யும் முகம் கூச செய்யும் செயல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். பொன்னம்பலம் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் யாஷிகா, ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்திற்கு எதிராக மற்ற போட்டியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் பெரும் கூச்சல் நிலவியது.

மேலும் ஷாரிக்கை கூப்பிட்டு பொன்னம்பலம் தவறை சுட்டிக்காட்டியதோடு கண்டித்தார். பொன்னம்பலம் தங்களை பற்றி தவறாக மக்கள் முன் கமலிடத்தில் சொல்லிவிட்டார் என்பதுதான் அந்த விவாதம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!