பிக்பாஸ் வீட்டு தலைவராக தேர்வானவர் ரம்யா!

சென்னை:
பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் தற்போதைய தலைவராக ரம்யா தேர்வாகி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வயது வித்தியாசம் பாராமல் பலரையும் பேசவைத்துவிட்டது. 16 போட்டியாளர்களில் 2 பேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். முதல் ஆளாக மமதி சாரியும், இரண்டாம் ஆளாக அனந்த் வைத்யநாதனும் வெளியேறினர்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் யாஷிகா, ஐஸ்வர்யா இணை பிரியா தோழிகளாகிவிட்டார்கள். இவர்களுக்கு ஜோடியாக மஹத் மற்றும் ஷாரிக் உள்ளனர். வீட்டில் தற்போதைய தலைவராக ரம்யா தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாத்திரம் கொடுக்கப்பட்டது.

நீண்ட நேரம் யார் தண்ணீர் வீணாகாமல் பார்த்துக்கொண்டார்களோ அவரே வெற்றியாளர். இந்த முறையில் தான் ரம்யா வெற்றி பெற்று தேர்வாகி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!