பிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்!

பிக் பாஸ் வீட்டில் முகேன் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது. அதிலும், ” நீதான் நீதான்” என்ற பாடல் வெறித்தனமான ரசிகர்களை முகேனுக்கு கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பிரபலமான சௌந்தர்யா, பிரியங்கா எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முகேனுடன் சேர்ந்து பாடினார்கள்.

தற்போது, குறித்த பாடலை பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் நேரடியாக சௌந்தர்யா பாடியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான், அனிருத்,ஹிமான் இவர்களும் கலந்துள்ளனர். மேலும் இந்த பாடலை கேட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கூடிய விரைவில் முகேனை இசையமைப்பாளர்கள் தேடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும் இல்லை பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆனவுடன் விஜய் நடிப்பில் “தளபதி 64” படத்தில் முகினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், அனிருத், இமான் ஆகியோர் தலைமையில் பாடமும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!