பிடிக்கும்… கிசுகிசுக்கள் பிடிக்கும்… தமன்னா ஓப்பன் டாக்

சென்னை:
பிடிக்கும்… கிசுகிசுக்கள் பிடிக்கும் என்று ஓப்பன் டாக் விடுத்துள்ளார் நடிகை தமன்னா.

உதயநிதி ஜோடியாக கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ள தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இவர் கிசுகிசுக்கள் படிப்பது தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என் கதை முடிந்துவிட்டது என்று சொல்லும்போது எனக்கு அதில் இருந்து அதிக உற்சாகம் கிடைக்கும்.

ஏனென்றால் அப்போது நான் ஒரு புதுமுகம் போல உணர்வேன். அது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். நானும் உழைப்பேன். அப்படி இதற்குமுன் அப்படியான தோல்வி முகத்தில் நான் இருந்தபோது தான் ‘பாகுபலி’ வாய்ப்பு வந்தது.

ஒரு நடிகையாக நடிப்பு வாழ்க்கை போதும் என்று நான் நினைக்கும்போது தான் எனது தொழில் வாழ்க்கை முடியும். எனக்குள் இருக்கும் நடிகைக்கு எப்போதும் ஓய்வு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!