பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்

தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். கடந்த வருடம் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை முன்கூட்டியே அதிரடியாக நிறுத்தினார்.

காரணம் தனக்கு மணமகனாக வரப்போகும் நபர் அடுக்கடுக்காய் அடுக்கிய நிபந்தனைகள் தன்னை மூச்சுமுட்ட வைத்ததாக கூறினார். வைக்கம் விஜயலட்சுமியின் இந்த முடிவுக்கு பலர் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பெரும்பாலும் சரியான நேரத்தில் சரியான முடிவையே அவர் எடுத்துள்ளார் என்று பாராட்டவே செய்தனர்.

இந்த நிலையில் வைக்கம் விஜயலட்சுமிக்கு மீண்டும் திருமணயோகம் கூடி வந்துள்ளது. ஆம்… கேரள மாநிலம் புலியூரைச் சேர்ந்த இன்டீரியர் டெக்கரேட்டரான ஏ.என்.அனூப் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி. இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் செப்டம்பர் 10 ஆம் தேதியும், திருமணம் அக்., 22-ம் தேதி வைக்கம் மகாதேவ கோவிலிலும் நடைபெற இருக்கிறது.

Sharing is caring!