பிப்ரவரியில் பேரன்பு வெளியிட திட்டம்

‘தரமணி’ படத்தை தொடர்ந்து, ராம் இயக்கியுள்ள படம் ‘பேரன்பு’. மம்முட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள, இந்தப்படத்தை பி.எல்.தேனப்பனின் ‘ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு மாற்றுத்திறனாளி மகளை வளர்க்கும் ஒரு தந்தையின் போராட்டங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றுள்ளதால் ‘பேரன்பு’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேரன்பு படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் குறித்த அப்டேட் இது தான். பிப்ரவரியில் பேரன்பு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன்.

‘பேரன்பு’ படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘LIGHT WEIGHT’ என்ற திரைப்படவிநியோக நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Sharing is caring!