பிரசாந்த் ஜோடியாகும் மிஸ் இந்தியா இந்தியா அனுக்ரீத்தி

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் கடந்த வருடம் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். பிறகு அவர் மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், அவர் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

சாக்லேட் படத்திற்கு பிறகு பிரசாந்த் – இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுக்ரீத்தி.

இந்தப் படத்தில் பூமிகா, பிரகாஷ் ராஜ், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் போன்றோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Sharing is caring!