பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓப்ராய்

பொலிவூட் நடிகர் விவேக் ஓப்ராய், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒமங் குமார் (Omung Kumar) இயக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படத்தில், மோடி வேடத்தில் நடிப்பதற்கு விவேக் ஓப்ராய் (Vivek Oberoi) ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், நாளைய தினம் (07) வெளியாகவுள்ள படத்தின் பெஸ்ட் லுக், 23 இந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய ‘விவேகம்’ படத்தில், விவேக் ஓப்ராய் வில்லனாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!