பிரபலமாகும் பிக்பாஸ் நடிகர் டேனியல்!

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு வெளியேறிய ஓவியா மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதையடுத்து இப்போது இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர்களும் ஓரளவு பிரபலமாகி விட்டனர். அவர்களில் நடிகர் டேனியல் குறிப்பிடத்தக்கவர்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் கமிட்டாகி விட்டார். குத்துச்சண்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெய்யின் நண்பராக அவருடன் படம் முழுக்க வரும் ஒரு காமெடி ரோலில் டேனியல் நடிக்கிறார். இந்த தகவலை அவர் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23-ந்தேதி முதல் சென்னையில் நடந்து வருகிறது.

Sharing is caring!