பிரபலமான ஒளிப்பதிவாளர் தர்மராஜ் மரணம்

தமிழ் சினிமாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர் தர்மராஜ். ரகுவரன் அறிமுகமான 7வது மனிதன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான தர்மராஜ், கைநாட்டு, மைக்கேல்ராஜ், மதுரக்கார தம்பி உள்பட தென்னிந்திய மொழிகளில் 35 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சினிமாவை விட்டு விலகி இருந்த தர்மராஜ், சைதாப்பேட்டையில் உறவினர்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மறுநாள் காலை அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை திறந்து பார்த்தபோது தான் அவர் இறந்தது தெரிய வந்தது. 67 வயதான தர்மராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது இறுதி சடங்குகள் நேற்று மாலை நடந்தது.

Sharing is caring!