பிரபல இயக்குனரின் படத்தில் சிம்பு நயன்தாரா!

கோலிவுட்டில் உருவான காதல் ஜோடிகளில் மிக பிரபலமானது சிம்பு- நயன்தாரா ஜோடி தான். வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் உருவானதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த காதல் சில காலத்திலேயே முறிந்தும் போனது.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக உத்தம சோழனின் மனைவி பூங்குழலியின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நயன்தாரா, கார்த்தி, ஐஸ்வர்யாராய், அமிதாப்பச்சன், ஜெயம்ரவி உள்ளிட்டோருடன் நடிகர் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிம்பும் நயன்தாராவும் காதல் முறிவிற்கு பிறகு நீண்ட இடைவெளியை கடந்து பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தில் கடைசியாக நடித்திருந்தனர். ஆனால் இப்படம் வெளிவந்தே 3 வருடங்களாகிவிட்டது.

Sharing is caring!