பிரபல இளம் சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை…!!

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ண ஜாஸ் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாகத் தெரிகிறது.அதனால், கடந்த சில நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறுகின்றனர்.

இந்நிலையில், மன அழுத்தம் மேலும் அதிகரிக்கவே, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுபர்ணாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இளம் நடிகையான சுபர்ணா மரணம் பெங்காலி திரைத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Sharing is caring!