பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப்போகிறாரா? நடிகை அனுஷ்கா..!!

நடிகை அனுஷ்கா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கின்றன.

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார்.

மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டினார். பிறகு உடல் எடை குறையவில்லை. இதனால், அதைக் குறைக்க அமெரிக்கா சென்றுவந்தார்.

அதைத்தொடர்ந்து, முன்னதாக நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், னுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை. அந்த கிரிக்கெட் வீரர் யாராக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அனுஷ்கா ரசிகர்கள்.

Sharing is caring!