பிரபல கோவிலில் தரிசனம் செய்தார் சமந்தா

நடிகை சமந்தா தமிழில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சின்ன கேரக்டரில் தொடங்கி, பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, விஷால், விக்ரம் என முக்கிய நடிகர்களுடன் நடித்துவிட்டார். தெலுங்கிலும் அவர் முக்கிய ஹீரோயினாக உள்ளார்.

தற்போது தெலுங்கில் மஜிலி என்ற படத்தில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் நடித்துள்ளார். மனம் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் வந்தது.

பின் சில வருடங்களில் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். விரைவில் மஜிலி படம் வெளியாகவுள்ளது. இதற்காக இருவரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

Sharing is caring!