பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை பிரியங்கா (வயது 32). பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .

இதனிடையே கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.

Sharing is caring!