பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி

சாய் பல்லவி கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஆவார். மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம்.

சாய் பல்லவியோ நடிக்க மறுத்துவிட்டாராம். இதற்கான காரணமாக சாய் பல்லவி கூறுகையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி.

சாய் பல்லவி நடிக்க மறுத்த பிறகு கீத கோவிந்தம் படம் புகழ் ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டார்களாம். நான் ரொம்ப பிஸி, டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம் ரஷ்மிகா.

சாய் பல்லவி, ரஷ்மிகா மட்டும் இல்லை தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான உபேந்திராவும் அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதால் மகேஷ் 26 படத்திற்கே பிரச்சனை வந்துள்ளது.

Sharing is caring!