பிரபல நடிகையின் மீது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வதந்தி?

கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்து வரும் இவர் அரசியலில் மூழ்கிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் மோடி அரசுக்கு எதிராக பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக அண்மையில் ஏசியா நெட், சுவர்ணா நியூஸ் 24*7 சானல்களில் செய்திகளை வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சியான அவர் 2013 ல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஈடுபட்டிருந்தேன். எனக்கும் ஐபிஎல்க்கு எனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.

இப்படி என் மீது தவறாக செய்தி வெளியிட்டதற்காக ரூ 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த ஊடகங்கள் நடிகையை பற்றி நாங்கள் நேரடியாக குறிப்பிடவில்லை என்று கூறின.

இந்நிலையில் வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு கடைசியில் திவ்யா சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஊடகங்கள் இதழியல் நெறிகளை மீறிவிட்டன. அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. அதனால் இரண்டு சானல் நிறுவனங்களும் திவ்யாவுக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Sharing is caring!