பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆடிய நடனம்!

ஹிந்தி சினிமாவின் ஸ்டார் நடிகை ஐஸ்வர்யா ராய். பல சூப்பர் ஹீரோக்களுடன் படங்களில் நடித்து வருகிறார். சக நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனுக்கு மருமகள் ஆனார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்தவர் ஏக் தில் ஹய் முஷ்கில் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அவர் மிக கவர்ச்சியாக நடித்திருந்தது சர்ச்சையானது.

தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா தன் மாமியார், மகள் என குடும்பத்துடன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதில் அவரின் மகள் ஆரத்யா நடனம் ஆட அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Sharing is caring!