பிரபாஸின் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராகிவிட்டார் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் சாஹோ. பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்க, சுஜித் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன.

நடிகர் பிரபாஸ்க்கு நேற்று(அக்., 23) பிறந்தநாள். இதையொட்டி தனது ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து ஒன்றை படைத்திருக்கிறார். சாஹோ படத்தின் ஆக்சன் காட்சிகள் அடங்கிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில், அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இந்த சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் உருவாகி இருப்பது கண்கூடாக தெரிகிறது. மேலும் இந்த வீடியோவின் முடிவில் ஒரு பெரிய மாலில் இருந்து பிரபாஸ் ஸ்டைலாக வெளிவரும் காட்சியும், பைக்கில் மின்னல் வேகத்தில் பறக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த முன்னோட்டத்தை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சாஹோ படம், தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அடுத்தாண்டு ரிலீஸாக உள்ளது.

Sharing is caring!