பிரபுதேவாவின் நடன அமைப்பு ….மாரி2 பாடலுக்காக

தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தில்,  பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ‘மாரி’. இதை தொடர்ந்து இந்த திரைபடத்தின் இரண்டம் பாகம் மாரி 2 என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.  தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக  நடிக்கிறார். மேலும், வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன். மாரி படத்தில் தனுஷின்  இன்ட்ரோ பாடலில் அவரது நடனம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது மாரி 2 படத்தில் பிரபுதேவா தனுஷுடன் இணைந்துள்ளார். இதனால் மாரி 2-வில் ஒரு அதிரடி நடனம் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

இது தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, மாரி 2 படத்தில் எங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இது மிகப்பெரிய தருணம், நன்றி சார்” என தெரிவித்துள்ளார். பிரபுதேவாவுடன் சேர்ந்து  எடுத்துக்கொண்ட போட்டோவையும் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

Sharing is caring!