பிரபுதேவாவை இயக்கும் நாயகன்

“தூத்துக்குடி”, “மதுரை சம்பவம்” உள்ளிட்ட படங்களில் நாயகனாக  நடித்தவர் ஹரிகுமார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குந‌ராக பணிபுரிந்துள்ளார்.  இந்நிலையில், இயக்குந‌ராக அறிமுகம் ஆக உள்ள  ஹரிகுமார் “தேள்” என்கிற டைட்டிலில், பிரபுதேவாவை  இயக்க உள்ளார்.

இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க, சி.சத்யா இசையமைக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் கே. எல். எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.  கலை இயக்குநராக செந்தில் ராகவனும், சண்டைப் பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணிபுரிய உள்ளனர்.  இத்திரைப்படத்துக்கான  படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Sharing is caring!