பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவே ஆசை

அறிமுகமான ஒரு சில படங்களின் மூலமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சாயிஷா சய்கல், பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவே ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறு வயதில் இருந்தே நடனம் கற்று வருகிறேன். எனக்கு 10-க்கும் மேற்பட்ட வகை நடனம் தெரியும். அதனால் முழு நீள நடனப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது

என சாயிஷா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

லத்தீன் அமெரிக்கன் ஸ்டைலில் சம்பா, சல்சா மற்றும் கதக் போன்ற நடனங்களைக் கற்றுக்கொண்டுள்ள சாயிஷா தற்போது ஜிம்னாஸ்டிக்ஸூம் கற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!