பிரமாண்ட முன்பதிவு… ரஜினியின் 2.0 படத்திற்கு!

சென்னை:
ரஜினியின் 2.0 படத்திற்கான முன்பதிவு பிரமாண்ட அளவில் நடந்துள்ளது.

இந்தியாவே மிக ஆவலுடன் காத்திருந்த 2.0 படம் இன்று ரிலீஸ். உலகம் முழுவதும் சுமார் 10,000 தியேட்டர்களில் படம் ரிலீசாகிறது.

450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும் என்று தான் சினிமா துறையினர் உற்று நோக்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிய டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்துள்ளது.

புக்மைஷோ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை 1 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் முன்பதிவாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!