பிரவுதேவாவின் அடுத்த படம் “தேள்”

பிரபு தேவா நடிப்பில் கடந்த வாரம் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. தற்போது ‘சார்லி சாப்ளின் 2, யங் மங் சங், காமோஷி, பொன் மாணிக்கவேல்‘ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். இப்போது இன்னுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இந்தப் படத்தை ‘தூத்துக்குடி, மதுரை சம்பவம்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஹரிகுமார் இயக்குகிறார். படத்திற்கு ‘தேள்’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. இன்று இதன் பூஜை நடைப்பெற்றது.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகப்  பணியாற்றுகிறார். படத்தின் ஹீரோயின் மற்றும் இதர நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப் படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Sharing is caring!