பிரான்சில் தன் படத்தின் சாதனையை தானே முறியடித்த விஜய்

சென்னை:
பிரான்சில் தன் படத்தின் சாதனையை தானே முறியடித்துள்ளார் விஜய்.

தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டத்தின் உச்சமாக இருக்கிறது. காரணம் விஜய்யின் சர்கார் படம் ரிலீஸாகிவிட்டது, பாதி ரசிகர்களும் பார்த்துவிட்டனர்.

அடுத்து விஜய்யின் சர்கார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் அறிந்து கொள்ளதான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது சர்கார் படத்தை பிரான்சில் வெளியிட்ட EOY Entertainment ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.

அங்கு விஜய்யின் சர்கார் 2160 என்ட்ரீஸ் பெற்றுள்ளதாம். தன் பட சாதனையையே விஜய் முறியடித்துவிட்டார் என்று அவர்கள் பதிவு செய்துள்ளனர். என்ட்ரீஸில் அதிகம் பெற்றிருக்கும் விஜய்யின் சர்கார் வசூலிலும் முதல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!