பிரியா வாரியரின் டாட்டூ

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு பிரபலமடைந்ததைத் தொடர்ந்து அவரது டாட்டூவும் தற்போது பிரபலமாகியுள்ளது.

ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வௌியாகிறது.

தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

இந்நிலையில், பிரியா வாரியரின் கண்ணசைவைத் தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலமடைந்துள்ளது.

‘கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள் என்பது அதன் அர்த்தம்.

Sharing is caring!