பிரெஞ்ச் படத்தின் ரீமேக்கா விக்ரமின் கடாரம் கொண்டான் படம்?

சென்னை:
பிரெஞ்ச் படமான பாயிண்ட் பிளாக் படத்தின் ரீமேக்தான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் என்று தகவல்கள் உலா வருகிறது.

நடிகர் விக்ரமின் கையில் அடுத்தடுத்து நிறைய படங்கள் உள்ளது.
ரசிகர்கள் சியான் நடிப்பில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் செம ஸ்டைலிஷ்ஷாக மாஸான வசனங்களுடன் நடித்துள்ளார்.

படம் எப்போது ரிலீஸ் என்பது தெரியவில்லை, இப்போது அவர் ராஜேஷ் இயக்கும் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்துவரும் நிலையில் ஒரு புதிய தகவல். அதாவது இப்படம் பிரெஞ்ச் படமான பாயிண்ட் பிளாக் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!