பிர்ஸா முண்டாவின் கதையை படமாக்கும் அறம் இயக்குநர்

நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறியவர் கோபி நயினார். தற்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சமூக அக்கறை கொண்ட கதையில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு இடையே மற்றுமொரு கதையையும் தயார் செய்து வருகிறார் கோபி. வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை படமாக்குகிறார். 25 வயது வரை மட்டுமே வாழ்ந்த பிர்ஸா, ஆங்கிலேயர்களை விரட்ட புரட்சியை செய்தவர். மேலும் பழங்குடி இன மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்.

இதுப்பற்றி கோபி நயினார் கூறுகையில், “பிர்சா முண்டா வடக்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட நபர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டவர். இவரின் கதையை படமாக்குகிறேன். இதற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். இதற்காக 2 ஆண்டுகள் பல்வேறு ஆவணங்களை திரட்டி உருவாக்கி உள்ளேன். பெரிய பட்ஜெட்டில் படமாக தயாராகிறது. முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். ஜெய் படத்தை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” என்றார்.

Sharing is caring!