பிறந்தநாளில் இரண்டு அறிவிப்பு தரும் சிம்பு

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சுந்தர்.சி. இயக்கும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இந்த படம் அரசியல் கலந்த அதிரடிப்படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை தொடர்ந்து சீமான் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘தம்பி’, ‘வாழ்த்துக்கள்’ ஆகிய படங்களை இயக்கிய சீமான் நீண்ட இடைவெளிக்கும்ப பிறகு இயக்கும் படம் இது. சீமானும் சிம்புவும் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது.

Sharing is caring!