பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய ஜான்வி… புகைப்படங்கள் வைரல்

வாரணாசி:
பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி உள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகன் ஜான்வி கபூர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் நேற்று தனது 22வது பிறந்த நாளை வாரணாசியில் கொண்டாடினார். அப்போது பிறந்த நாள் கேக்கை அவர் வாளால் வெட்டி கொண்டாடினார். தந்தை போனி கபூர், தங்கை குஷி கபூருடன் பிறந்த நாளை அவர் கொண்டாடினார்.

ஸ்ரீதேவி படங்களில் நடித்தபோது பிறந்தநாள் அன்று திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அம்மாவை போல நானும் திருப்பதி செல்ல நினைத்தேன், ஆனால் முடியவில்லை என ஜான்வி வருத்தம் தெரிவித்துள்ளார். ஜான்வி கபூர் தன் பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!