பி.சி. சென்டரில் இறங்கி அடிக்க விஜய் முடிவு… சிவாவுடன் கூட்டணியா?

சென்னை:
இறங்கி அடிக்கணும்… பி.சி. சென்டரில் இறங்கி அடிக்கணும் என்று விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி சேர்வார் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு நல்ல பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்தும்படி படம் நடிக்க வேண்டும் என்று விருப்பமாம்.

அட்லீ படமே அப்படி தான் என்றாலும், பி, சி-யில் இறங்கி அடிக்க ஒரு இயக்குனர் தேவை தானே. சிறுத்தை சிவாவும் விஜய்க்காக 2,3 கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம். இதை அவரே கூறியுள்ளார். இதனால், எப்போது வேண்டுமானாலும் இந்த கூட்டணி இணைய வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!