பீட்சா படத்தை அடுத்து ஜிகர் தண்டா

பீட்சா படத்தை அடுத்து சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ஜிகர் தண்டா. கிரைம் கலந்த காமெடி கதையில் உருவான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதோடு வில்லனாக நடித்த பாபிசிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத் தது.

இந்தநிலையில், ஜிகர்தண்டா படத்தை தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் வருண்தேஜ் நடிக்க, நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அதோடு, தெலுங்கு ஜிகர்தண்டா ரீமேக் படத்திற்கு வால்மிகி என்று டைட்டீல் வைத்திருப்பதாக இயக்குனர் ஹரிஷ் சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!