பீட்டர் ஹெய்னிடம் சண்டை கற்க தயாராகும் பிரணவ் மோகன்லால்

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், ஜீத்து ஜோசப் டைரக்சனில் ஆதி என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படமே நூறு நாட்கள் ஓடி அவரை வெற்றிகரமான ஹீரோவாக மாற்றியது. அவரது இரண்டாவது படத்தை இயக்குனர் அருண்கோபி இயக்கவுள்ளார். இவர் திலீப்பின் சூப்பர்ஹிட் படமான ராம்லீலா படத்தை இயக்கியவர்.

இவர்கள் கூட்டணியில் உருவாக்கவுள்ள படம் ஆக்சன் களத்தில் பயணிக்க இருக்கிறதாம். அதனால் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க இருக்கும் பீட்டர் ஹெய்னிடம் முன்கூட்டியே சண்டை பயிற்சி எடுக்க இருக்கிறார் பிரணவ். அவரது முதல் படமான ஆதி-யில்கூட முக்கிய இடம்பிடித்த பார்க்கோர் சண்டைகாட்சிக்காக அவர் ஹாலிவுட் கலைஞர்களிடம் தனியாக பயிற்சி எடுத்தார் என்பதும், படத்தில் அந்த காட்சிகள் தான் ஹைலைட்டாக அமைந்ததுதான் ரசிகர்களை திரும்ப திரும்ப தியேட்டர்களுக்கு வரவழைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Sharing is caring!