புகார் கொடுத்த அம்மாவிற்கு, பதில் கொடுத்துள்ளார் சங்கீதா’

நடிகை சங்கீதா சென்னை வளசரவாக்கத்தில் தனது கணவர் கிரிஷுடன் வசித்து வருகிறார்.  அந்த வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பானுமதியும், முதல் ஃப்ளோரில் சங்கீதாவும் வசித்து  வருகின்றன‌ர்.  இந்நிலையில்  சஞ்கீதாவியின் தாயார் பானுமதி, வயதான காலத்தில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயல்வதாக, தன் மகள் சங்கீதா மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.  மேலும், இரண்டு  நாட்களுக்கு முன்னர், மகளிர் ஆணையத்தில், தன் கணவர் கிரிஷுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் சங்கீதா.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக, ட்விட்டரில்  பதிவிட்டுள்ள சங்கீதா:  போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் 2 மகன்களுக்காக என் வாழ்வை சீரழித்ததற்கு நன்றி, என பதிவிட்டுள்ள அவர், உன்னுடைய சில முடிவுகளை நான் ஏற்றுக்கொள்ளாததற்காக சொந்த வீட்டுக்குள்ளேயே என்னை கார்னர் செய்ததற்கு நன்றி” என பதிவிட்டிருக்கிறார்.

Sharing is caring!