புகைப்பட கலைஞர் வீணாக பழி

தமிழ் சினிமாவில், மீ டூ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுனை தொடர்ந்து, நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாக ராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் கூறி உள்ளார். தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரசாந்த் நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் குறித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகாரை மறுத்திருந்த தியாகராஜன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்னர் சங்கர் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை திரையிட்டு காட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இங்கே பொன்னர் சங்கர் காட்சியை உங்களுக்கு போட்டு காட்டினேன். இதில் அத்தனை பேர் உயிரை கொடுத்து உழைத்துள்ளனர். மருத்துவர்கள் உட்பட அத்தனை பேர் செட்ல இரவு பகலா உழைத்தனர். படத்தில் இரண்டு மிஸ் இந்தியா பெண்கள் நடித்தனர். எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை.

என் மீது புகைப்பட கலைஞர் வீணாக பழி சுமத்தி உள்ளார். பேஸ்புக்கில் அவர் எழுதியதை உண்மை என்று எமுதினர். எழுதியவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த பெண் இரண்டு நாட்கள் மட்டுமே எங்களோடு டிரைனியாக வந்து வேலை பார்த்தார்.

Sharing is caring!