புகைப்பிடிப்பவர்களுக்கு அமலா பால் உற்சாகம் கொடுக்கிறார்

நடிகை அமலா பால், இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்து கொண்டு, விரைவிலேயே விவகாரத்தும் பெற்றுக் கொண்டு விட்டார். தமிழ், மலையாளம் என பல மொழி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர், சில காலம் முடங்கினார்.

தற்போது, ‘ராட்சசன்’ படத்தின் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து, ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், சில விஷயங்களை பரபரப்பாக செய்தால்தான், சினிமாவில் நிற்க முடியும் என அமலா பால் நினைத்து விட்டாரோ என்னவோ, ‘ஆடை’ப் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். டவுசர் அணிந்து படகு ஓட்டும் புகைப்படத்தை வெளியிட்டவர், சமீபத்தில் லுங்கி கட்டிக் கொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் நின்று கொண்டு “வாங்க கள்ளு குடிக்கலாம்” என்று அழைத்தார்.

அந்த பரபரப்புகளே இன்னும் அடங்காத நிலையில், தான் சிகரெட் புகைப்பது போன்ற படத்தை அமலாபால் வெளியிட்டிருக்கிறார். பொது இடங்களில் புகைப்பது குற்றம் என அரசுத் தரப்பில் சொல்லிக் கொண்டிருக்க, புகைப்பது போன்ற படத்தை வெளியிட்டு, புகைப்பிடிப்பவர்களுக்கு அமலா பால் உற்சாகத்தை ஏற்படுத்துவது போல செய்திருப்பது சரியல்ல என, சமூக ஆர்வலர்கள் அமலா பாலுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்.

Sharing is caring!