புதியவர்களின் ரோஜா மாளிகை

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் திகில் படம் ரோஜா மாளிகை. பர்ஸ்ட்லுக் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரபல விளம்பர பட இயக்குனர் கவுதம் இயக்குகிறார். அமரன், ஊர்வசி வத்ராஜ் என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார், லியோ இசை அமைக்கிறார்.

படம் பற்றி கவுதமன் கூறியதாவது: இது காமெடி கலந்த ஹாரர் படம். 50 நாட்கள் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஐடி துறையில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். திருமணம் நடந்த பிறகு வெளிநாட்டிற்குப் போய் செட்டிலாக ஏற்பாடு நடக்கிறது.

திருமண பரிசாக ஊர்வசியின் தாத்தா ஊட்டியில் மிகப்பெரிய மாளிகையை எஸ்டேட்டுடன் பரிசளிக்கிறார். அங்கே போய் தங்கும் அந்த இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் தான் படத்தின் திரைக்கதை. ஜாலியான அதே நேரம் பரபரப்பான திரைக்கதை மூலம் ரோஜா மாளிகை எல்லோராலும் ரசிக்கும் படமாக உருவாகி உள்ளது. முதல் முறையாக தேவதர்ஷினி, மதுரை முத்து இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 6 ம் தேதி வெளியாகிறது. என்றார் இயக்குனர் கவுதம்.

Sharing is caring!