புதிய ஆட்டோ வாங்கி கொடுத்து அசத்திய நடிகர் அஜித்

சென்னை:
செய்வதை யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் நடிகர் அஜித்தின் பழக்கம்.

அஜித் செய்யும் பல நல்ல விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகவே இருந்து விடுகிறது. அப்படிப்பட்டதுதான் இதுவும் ஒன்று.

அஜித் எப்போதும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர்களுக்கு கை காட்டி செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது நீண்ட நாட்களாக இருந்த ஆட்டோவை மாத தவணை கட்டவில்லை என சொல்லி எடுத்து சென்றுள்ளனர்.

இதை அறிந்த அஜித் அந்த ஓட்டுனரை தனது வீட்டுக்கு அழைத்து புதியதாக ஒரு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அஜித் கேட்ட ஒரு கேள்வி ’என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே’ என்பது தான். அந்த ஓட்டுனருக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!