புதுப்படங்கள் ரிலீசானாலும் மாஸ் காட்டும் ரஜினியின் 2.0 படம்

சென்னை:
எத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் 2.0 படத்திற்கு என்று தனி இடம் இன்னும் தியேட்டர்களில் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று 5 படங்கள் திரைக்கு வந்துள்ளது, எந்த படத்திற்கு எந்த தியேட்டர் என்பதை ரசிகர்கள் தேடிக்கண்டு பிடிப்பதே பெரும் விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு தியேட்டரில் ஒவ்வொரு காட்சி ஒவ்வொரு படம் என திரையிட்டு வருகின்றனர்.

சென்னையின் மிக முக்கியமான சத்யம் சினிமாஸ் இத்தனை படங்கள் வந்தும் ஞாயிறு அன்று மெயின் ஸ்கிரீனை 2.0 படத்திற்காக தான் ஒதுக்கியுள்ளதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!