புதுமுக நடிகரை போதையில் தாக்கிய நடிகர் விமல் மீது புகார்

சென்னை:
புதுமுக நடிகரை போதையில் தாக்கியுள்ளதாக நடிகர் விமல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல், மது போதையில் புதுமுக நடிகரை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் புதுமுக நடிகர் அபிஷேக். இவர் விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து அபிஷேக் போனில் பேசிக் கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த நடிகர் விமல் மற்றும் 4 பேர் சேர்ந்து அபிஷேக்கிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அபிஷேக் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக அபிஷேக் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில் மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!